PATIENTS RIGHTS AND RESPONSIBILITIES
Patients Rights And Responsibilities
Patients & Their Family Rights
Right to Respecting values and beliefs, any special preferences, cultural needs, and responding to requests for spiritual needs. மதிப்பீடு, நம்பிக்கைகள், சிறப்பு விருப்பங்கள் மற்றும் பண்பாட்டு தேவைகளை மதிக்கும் உரிமை மற்றும் ஆன்மீக தேவைகளுக்கான கோரிக்கைகளுக்கு உரிய பதில் பெறும் உரிமை.
Right to confidentiality, human dignity and privacy during examination, procedures and treatment. பரிசோதனை, சிகிச்சை மற்றும் நடைமுறைகளின் போது நோயாளியின் தனியுரிமை, ரகசியத்தன்மை மற்றும் கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கான உரிமை.
Right to Protection from neglect or abuse. அலட்சியம் அல்லது தவறான நடத்தையிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை.
Right to Treating patient information as confidential. நோயாளியின் தகவல்களை ரகசியமாக பாதுகாக்கும் உரிமை.
Right to refusal of treatment and second opinion. சிகிச்சையை நிராகரிக்கும் மற்றும் இரண்டாவது கருத்தை பெறும் உரிமை.
Right to choose alternative treatment options if available. மாற்று சிகிச்சைகளைத் தேர்வு செய்யும் உரிமை.
Right to informed consent before procedure/Surgery. சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சைக்கு முன் ஒப்புதல் அளிக்கும் உரிமை.
Right to be heard and seek redressal. Please contact no: 81898 00666/Use the feedback form. நிறைகுறை பகிர்தல் மற்றும் புகார் அளிப்பதற்கான உரிமை. உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களைப் பகிர 81898 00668 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும் / கருத்து படிவத்தின் மூலம் தெரிவிக்கவும்.
Right to get information on expected cost of treatment, transparency in rates, and care according to prescribed rates whatever relevant. சிகிச்சைக்கான எதிர்பார்க்கப்படும் செலவுகள், கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் முறைப்படி சிகிச்சை மற்றும் பராமரிப்பை பெறுவதற்கான உரிமை.
Right to access records and reports. மருத்துவ பதிவுகள் மற்றும் அறிக்கைகளை அணுகும் உரிமை.
Right to know the treating doctors team, care plan, progress and information on health care needs. சிகிச்சையளிக்கும் மருத்துவ குழு, பராமரிப்பு திட்டம். நோயாளியின் முன்னேற்றம் மற்றும் சுகாதார தேவைகள் குறித்த தகவல்களை அறியும் உரிமை.
Right to safety and quality care according to standards. தரநிலைகளின்படி பாதுகாப்பான மற்றும் தரமான பராமரிப்பு பெறும் உரிமை.
Right to educate on risks, benefits, expected treatment outcomes and possible complications to enable them to make informed decisions, and involve them in the care planning and delivery process. சிகிச்சையின் ஆபத்துக்கள், நன்மைகள், எதிர்பார்க்கப்படும் முடிவுகள் மற்றும் சாத்தியமான சிக்கல்கள் பற்றி விளக்கப்படுவதன் மூலம் அறிவுப்பூர்வமான முடிவுகள் எடுக்கவும், பராமரிப்பு இட்டமிடல் மற்றும் வழங்கல்களில் பங்கேற்கும் உரிமை.
Right to know about the results of diagnostic test and the diagnosis. பரிசோதனைகளின் முடிவுகள் மற்றும் நோய்நிலை குறித்த தகவல்களை அறியும் உரிமை.
Right to explain about any change in the patient’s condition. நோயாளியின் நிலைமையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தகவல்களை அறியும் உரிமை.
Right to Patient Education in a language and format that can understand. புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் நோயாளியின் உடல்நலம் பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை.
Right to Emergency Medical Care. புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் நோயாளியின் உடல்நலம் பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை.
Right to choose source for obtaining medicines or tests. மருந்துகள் அல்லது பரிசோதனைகளுக்கான ஆதாரத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை.
Right to proper referral and transfer, which is free from perverse commercial influences. மருந்துகள் அல்லது பரிசோதனைகளுக்கான ஆதாரத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை.
Right to protection for patients involved in clinical trials. மருத்துவ பரிசோதனைகளுக்குள்ளாகும் நோயாளிகளின் பாதுகாப்பிற்கான உரிமை.
Right to protection of participants involved in biomedical and health research. மருத்துவ பரிசோதனைகளுக்குள்ளாகும் நோயாளிகளின் பாதுகாப்பிற்கான உரிமை.
Right to take discharge of patient or receive body of deceased from hospital. தங்களின் விருப்பத்தின் பெயரில் நோயாளியை டிஸ்சார்ஜ் செய்யவும் அல்லது இறந்தவரின் உடலை பெற்றுக்கொள்ளும் உரிமை.
Patients & Their Family Responsibilities
To provide all personal, and family health information and truthful history required for appropriate care of the patient. நோயாளிகளுக்கு உரிய பராமரிப்பை வழங்க தேவையான தனிப்பட்ட மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உண்மையான மருத்துவ வரலாற்றை வழங்கும் பொறுப்பு.
To provide complete and accurate information including full name and address. முழமையான மற்றும் துல்லியமான தகவல்கள் உட்பட முழுப் பெயர் மற்றும் முகவரியையும் வழங்கும் பொறுப்பு.
To participate in taking decisions about your medical treatment. சிகிச்சை குறித்த முடிகளை எடுக்கும் பணியில் பங்கேற்கும் பொறுப்பு.
To follow instructions and comply with the plan of care. மருத்துவ ஆலோசனைகளையும் பராமரிப்பு திட்டத்தையும் பின்பற்றும் பொறுப்பு.
To comply with the hospital policies and procedures such as making noise, the number of visitors, and visiting hours. மருத்துவமனை விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை (சத்தம் இடாதிருத்தல், வருகையாளர்களின் எண்ணிக்கை மற்றும் நேரம்) பின்பற்றுதல்.
To respect the priority given to Emergency cases. அவசர சிகிச்சைக்கான முன்னுரிமை அளிக்கப்படுவதைக் மதிக்கும் பொறுப்பு.
To accept financial responsibilities for health care services provided and settle the bills promptly. மருத்துவ சேவைகளுக்கான செலவுகளை ஏற்று, தொகையை (அ) பணத்தை செலுத்தும் பொறுப்பு.
To give consent for treatment and other procedures as recommended by your doctors. மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சை மற்றும் செயல்முறைகளுக்கு ஒப்பதல் வழங்கும் பொறுப்பு.
To treat hospital staff, other patients, and visitors with courtesy and respect. மருத்துவமனை பணியாளர்கள் மற்ற நோயாளிகள் மற்றும் வருகையாளர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளும் பொறுப்பு.
To communicate with your healthcare provider, if there is any change in the patient’s condition. நோயாளியின் நிலைமையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக சுகாதார பணியாளரிடம் தெரிவிக்கும் பொறுப்பு.
Do not take any medication without the knowledge of your doctor. உங்கள் மருத்துவரின் அறிவுரைப்படி மருந்து எடுத்துக் கொள்ளும் பொறுப்பு.
To ask questions when unable to understand what the doctors and other staffs tells about diagnosis or treatment. மருத்துவர் அல்லது பணியாளர்கள் கூறும் நோய்நிலை மற்றும் சிகிச்சை பற்றி புரியவில்லை என்றால் கேள்விகள் மூலம் தெளிவடையும் பொறுப்பு.
To attend follow-up appointments as requested on time. உரிய நேரத்தில் சிகிச்சைப் பின்தொடர்களுக்கு வருகை தரும் பொறுப்பு.
To keep realistic expectations from their doctor and his/her treatment. உங்கள் மருத்துவரிடம் அவரது சிகிச்சை உண்மையான எதிர்பார்ப்புகளை வைத்திருக்க வேண்டும்.
To do contribute to good health, and take responsibility for their health. நல்ல உடல்நலத்திற்கு பங்களித்து, தங்களுடைய உடல்நலத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்.
Do not ask for surreptitious bills and false certificates, and/or advocate forcefully by unlawful means to provide me with one. போலி ரசீது அல்லது போலிச் சான்றிதழ்கள் கேட்டு அல்லது சட்டவிரோதமான முறையில் வலியுறுத்தக் கூடாது.
Do report fraud, wrong-doing and unhappy state to doctors and concerns. மோசடி, தவறான செயல்கள் மற்றும் திருப்தியற்ற நிலைகளை மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளிக்க வேண்டும்.
To abide by the hospital/facility rules. மருத்துவமனை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
To let the doctor know if there are any aspects of the treatment that have been difficult to understand or if there are difficulties adhering to the treatment. சிகிச்சையில் புரியாதது அல்லது பின்பற்றுவதில் சிரமம் உள்ளதென்றால் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
To display intent to participate intelligently in my medical care by actively involving myself in the prescribed do-at-home activities. மருத்துவர் அறிவுரையின்படி வீட்டில் செய்யவேண்டிய நடவடிக்கைகளில் ஆர்வமுடன் பங்கேற்று சிகிச்சையின் பலனை பெற வேண்டும்.
To make sincere effort to understand therapies which include the medicines prescribed and their associated adverse effects and other compliances for effective treatment outcomes. பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பக்கவிளைவுகள் குறித்து தெரிந்து கொள்ளுவதற்கும், அதனை சரியாக பின்பற்றுவதற்கும் நேர்மையாக முயற்சி செய்ய வேண்டும்.
